Saturday, October 14, 2017

கணினி அறிவியல் கற்றதும் பயன்பெற்றதும். பகுதி-3


வெகு நாட்களாக விடை தெரியாதா என்ற கேள்விக்கு நண்பன் கணேஷிடமிருந்து  பதில் கிடைத்தது. அது asp.net-ல் website என்பதற்கும்  வெப் அப்ளிகேசன் என்பதற்கும் என்ன வேறுபாடு என்று.
Html-ல் நாம் உருவாக்குவவை கான்டன்ட்(CONTENT) சார்ந்ததாகும். ஆனால் ஏஸ்பி.நெட் –ல் நாம் உருவாக்குவவை கிளாஸ் லைப்ரரி  ஆகும். அதாவது dll பைல்கள் ஆகும். வெப் சைட் ஆக உருவாக்கும் பொழுது ஒவ்வொரு பக்கமும் ஒரு டிஎல்எல் ஃபைல்களாக உருவாகும். வெப் அப்ளிகேசனில் ஒட்டு மொத்த பக்கங்களும் இணைந்து ஒரே டிஎல்எல் ஃபைலாக உருவாகும்.
இப்பொழுது வெப் சைட்டில் ஏதாவது பக்கத்தில் மாடிஃபை செய்தால் பிற பக்கங்களில் தொடர்ந்து பயனர் தடங்களின்றி பார்க்க முடியும். வெப் அப்ளிகேசனில் ஏதாவது ஒரு பக்கத்தில் மாடிஃபை செய்தால் ஒட்டு மொத்த அப்ளிகேசனும் பாதிக்கப்படும்.
நண்பனுக்கு நன்றி சொல்லி விட்டு தி இந்து தமிழ் நாளேட்டை புரட்டினேன் .
தானாகச் செயல்படும் மாய கேமரா பற்றிய செய்தி அதில் இருந்தது.
தேனீரை பருகிக் கொண்டே படித்தேன்.
இப்பொழுது கூகுள் வெள்ளோட்டம் விட்டிருக்கும் ஸ்மார்ட் கேமரா எனப்படும் கூகுள் கிளிப்ஸ்  பற்றிய செய்தி அது.
இது உள்ளங்கையில் அடங்கி விடும் சதுர வடிவ கேமராவாக உள்ளது. இந்த கேமராவில் சின்னஞ்சிறிய லென்ஸ் மட்டுமே இருக்கின்றது.வியூ பைண்டர் கிடையாது. எனவே இதை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.வீட்டில் எங்காவது ஒரு மூலையில் தொங்க விட்டால் போதும். அது தானாகப் படம் எடுத்துக் கொள்ளும்.
அது மட்டுமல்ல தான் பார்க்கும் முகங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஆற்றலும் கொண்டிருக்கின்றது. ஆக நாளடைவில் இது முகங்களை நன்றாக பரிச்சயம் செய்து கொண்டு அறிமுகம் இல்லாதவர்களை படம் எடுப்பதைத் தவிர்க்கவும் செய்யும்.
மழலைகள் உள்ள வீட்டில் கேமராவை ஒரு மேஜையில் பொருத்தி விட்டால் ,மழலைகளின் குறும்புகளும்  மந்தகாசப் புன்னகைகளும் அழகாகப் பதிவாயிருக்கும். செல்லப் பிரணிகள் மீது பாசம் உள்ளவர்களும் இந்த கேமராவைப் பயன்படுத்தலாம்.
இந்த சுவையான செய்தியுடன் என்னுடைய இந்தக் கட்டுரையை  இப்போதைக்கு முடித்துக் கொள்கின்றேன்.
மீண்டும் சந்திப்போம்.
-நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.



ads Udanz

No comments:

Post a Comment