Sunday, October 8, 2017

கணினி அறிவியல் கற்றதும் பயன் பெற்றதும்.-பகுதி-2


-------------------------------------------------------------------முத்து கார்த்திகேயன்,மதுரை.

API  என்றால் என்ன?

வெகு நாட்களாக இதைப் பற்றி அறிய வேண்டும் என எண்ணியிருந்தேன்.
அது தான் கூகிள் இருக்கின்றதே அதில் சியர்ச்(search)செய்தேன்.

பதிலாக webobedia.com –ல் பின் வரும் படி ரிசல்ட் இருந்தது.

An  application program interface (API) is a set of routinesprotocols, and tools for building software applications. Basically, an API specifies how software components should interact. Additionally, APIs are used when programming graphical user interface (GUI) components. A good API makes it easier to develop a program by providing all the building blocks. A programmer then puts the blocks together.

சற்று புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

காலிங் பெல்லை யாரோ அழுத்தும் சத்தம் கேட்டது.

கதவை திறந்த பொழுது சரவணன் நின்றிருந்தான்.

வார்ரே வா சரியான சமயத்தில் தான் வந்திருக்கின்றான்.

புன்ன்னகையுடன் அவனை வரவேற்றேன்.

“என்னடா பிசியா” என்றான்.

“அதெல்லாம் ஒன்றில்லை . API பற்றி நீ அறிந்த விசயங்களை சொல்லேன்” என்றேன்.

“எந்த API” என்றவன் “ஓ அப்ளிகேசன் ப்ரோக்ராமிங் இண்டர்பேசா?” என்றான்

“ஆம் “

“ஒகே நாம் இப்பொழுது இணையத்தில் ஏர்லைன் டிக்கட் புக் பண்ணுகின்றோம். அதற்கு  எல்லோரும் ஒரே இணைய தளத்தை நாடுவதில்லை. வெவேறு இணைய தளத்தில் புக் செய்கின்றோம். ஆனால் இணைய தளத்திலும் ஏர்லைனுக்கு கனக்டிவிட்டி கிடைக்கின்றதே அது எவ்வாறு என்று யோசித்தாயா?”

“ஆம்”

“இப்பொழுது சில இணைய தளங்களில் நுழைகின்றோம்.SIGN UP கேட்கும். பெயர்,இமெய்ல் ஐடி போன்றவை கொடுத்து SIGN UP செய்யலாம். ஆனால் அதே இணைய தளத்தில்  வேறு சில ஆப்சன்களும் இருக்கலாம் . அவையாவன ‘SIGN UP USING GOOGLE’ அல்லது ‘SIGN UP USING FACEBOOK’ போன்று. “

“ஆம்”

“GOOGLE என்பது  மிகப்பெரிய இணைய தளம். அதில் லாக் இன் செய்தால் ஜிமெய்ல், யூ டியூப், என எல்லாவற்றிற்கும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொழுது மற்றொரு இணைய தளத்திலிருந்து ‘login using gmail’என்றால் கூகிளில் நீங்கள் கொடுத்த விவரப்படி அந்த வெப் சைட் உங்களை அதற்குள் நுழைய அனுமதிக்கின்றது.”

“ஆமாம்”

“இது எல்லாமே API-யின் உதவியால் தான் ஏர் டிக்கட்  புக் செய்வதிலிருந்து ஒரு வெப் சைட்டில் கூகுள் அக்கவுண்டை பயன் படுத்தி  உங்களை ஆதண்டிகேட் செய்வது இது எல்லாமே அதன்படி தான்.”

“ஓ”

“இப்பொழுது API KEY என்றால் என்னவென்றால் ஒரு வெப் சைட்டில் நுழைந்து ‘ஹாய் கூகிள் நான் இந்த இணைய தளத்தில் நுழைய உன் உதவி தேவைப் படுகின்றது’.என்கின்றோம் அதுவும் அதன் டேட்டா பேசை பயன்படுத்தி உங்களை அந்த மூன்றாவது நபர் வெப் சைட்டில் நுழைய ஆதண்டிகேட் செய்கின்றது.இது தான் ஏபிஐ.”

“இப்பொழுது புரிகின்றது”

“இன்னும் விளங்கச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். அதாவது API  என்பது நமக்குச் சம்பந்தம் இல்லாத தனி கோடிங் . இது மற்றவர்களால் எழுதப்பட்டது. ஆனால் இதை யார் வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். அது எவ்வாறு எழுதப்ப்ட்டுள்ளது என்பதெல்லாம் நமக்கு தேவையில்லை. ஆனால் அதை பயன் படுத்தி கொள்கின்றோம்.

கூகிள் லாக் இன் போன்று. இது தான் API. “

“காஃபி சாப்பிடு” என்று அவனிடம் காஃபி கப்பை நீட்டினேன்.

பெற்றுக் கொண்ட அவன் மேலும் பேச ஆரம்பித்தான்.

“இப்பொழுது நீங்கள் ஒரு மொபைல் அப்ளிகேசனாய் வெதர் அப்ளிகேசன் உருவாக்குகிறீர்கள். அதற்கு நீங்கள் சாட்டிலைட்டை தொடர்பு கொண்டு அதற்கென கோடிங் எழுத வேண்டும் எண்ற அவசியமில்லை. ஏற்கனவே வேறு யாராவது ஒருவர் அதற்கெனே கோடிங்கை எழுதியிருப்பார். அது தான் API  .சிலவற்றை இலவசமாய் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் அது அன்றி  பணம் கொடுத்தும் உபயொகப் படுத்திக் கொள்ளலாம். காஃபிக்கு ந்ன்றி நான் கிளம்புகின்றேன்” என சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

நானும் தெளிவான ஒரு புரிதலுடன் அவனுக்கு விடை கொடுத்தேன்.

-----தொடரும்.
நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.
மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:
91 96293 29142
ads
Udanz
   
ads Udanz

No comments:

Post a Comment