Saturday, November 19, 2011

வாங்க பழகலாம் C மொழியை-----------1ம் பாடம்.


வாங்க பழகலாம்  C   மொழியை-----------1ம் பாடம்.


நீங்கள் இந்த பக்கத்துக்கு வந்ததே c  நிரலாக்கத்தை பழகலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதைக் காட்டுகின்றது.சரி வாங்க பழகலாம் மொழியை சந்தோசமாக...
நிரலாக்கம் என்றால் என்ன முதலில் தெரிந்து கொள்வோம்.
Programs are set of statements to find a solution to a particular problem.
வரிசையாக statements  இருக்கும் ஏதாவது problemக்கு தீர்வு காண வேண்டுமென்பதே அதன் நோக்கமாக இருக்கும்.
பொதுவாக மென்பொருளை இரண்டாக பிரிப்பார்கள்
அவையாவன
1.     Language
2.     Package
Package என்றால் எல்லாமே predefined ஆக இருக்கும். நமக்கு தேவையானவற்றை செய்ய மிகவும் மெனக்கிட வேண்டுமென்று அவசியமில்லை.பெரும்பாலான வற்றை just கிளிக் செய்வதன் மூலமே சாதித்துக் கொள்ளலாம்.உதாரணம் ms-word,ms-excel.
      Language என்றால் வரிசையாக statements  இருக்கும். அதன் மூலம் ஒரு packageயையே உருவாக்கலாம்.உதாரணம் c,c++,java,c#,vb
சரி இப்போது operating system எனப்படும் இயக்க முறைமை என்றால் என்ன என்று பார்ப்போம். Ms-word என்றால் டாகுமென்ட் தயாரிப்பது.ms-excel என்றால் விரிதாள் தயாரிப்பது என்று ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஒவ்வொரு வேலை.ஆனால் இவ்ற்றையெல்லாம் நிர்வாகிக்க ஒரு மென்பொருள் தேவைப் படுகின்றதே அது தான் operating system(os). இவை மேலும் பயனாளருக்கும் கணினிக்கும் இடையே இடைமுகப்பாக செயல் படுகின்றது.
உதாரணம்.
1.       விண்டோஸ்
2.       லினக்ஸ்
3.       யுனிக்ஸ்
இந்த வரிசையில் மூன்றாவதாக வரும் யுனிக்ஸ் ஓஸ் ஆனது உருவாக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றது.இதை உருவாக்க ஒரு நிரலாக்க மொழி தேவைப்பட்டது. அதற்காக தான் நிரலாக்க மொழியை உருவாக்கினார்கள் . இப்படித் தான் சி மொழியானது 1972ல் யுஎஸ்ஸில் உள்ள bell laboratoryயில்  Dennis Ritchie என்பவரால் உருவாக்கப் பட்டது.
Dennis Ritchie

அன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த மொழியை அடிப்படையாக கொண்டு தான் இன்று முன்னால் உள்ள பெரும்பாலான மொழிகள் உள்ளன.சி++,ஜாவா,சி# போன்ற மொழிகளையெல்லாம் எளிதாக கற்க வேண்டுமென்றால் சி மொழியின் அறிவு தேவையென்ற அவசியம். நிரலாக்க மொழிகளின் அ,ஆ தெரிய வேண்டுமென்றால் சி மொழியிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.
சி மொழியானது கிராபிக்ஸ்,கேம்ஸ்,ஓஎஸ் உருவாக்கம்,கம்பைலர் உருவாக்கம் போன்றவற்றில் பயன் படுகின்றது.
வாங்க பழகலாம் சி மொழியை...
-தொடரும்

ads Udanz

2 comments:

  1. நல்ல வலைப்பதிவு இடுகைக்கும் நன்றி.

    எழில் (நிரலாக்க மொழி) மூலம் இப்போது நீங்கள் தமிழ் கணினி நிரல்களை எழுத முடியும்!

    மேலும் விவரங்களுக்கு http://ezhillang.org இணையதளத்தில் பார்க்க.

    நன்றி
    முத்து

    ReplyDelete