Monday, October 10, 2011

c# chapter-3 c# Basics

ஒரு c# நிரல் (program) ஒன்றைக் காண்போம்.

class HelloWorld
{
public static void main()
{


System.Console.WriteLine('Hello World');
}
}

இதை இயக்கச் செய்ய visual studio ல் F5 விசையை அழுத்த வேண்டும்.


braces { and } .

இவை blocks ஆரம்பம் மற்றும் முடிவை குறிப்பிடப் பயன்படுகின்றது.மேலே கண்ட நிரலின் வெளியீடு இவ்வாறு இருக்கும்.

Hello World.

இவற்றில் WriteLine method '"Hello World' என்ற வெளியீட்டை விடுகின்றது. இந்த method , console என்னும் library classல் உள்ளது.இந்த library class ,system என்னும் namespaceல் உள்ளது.

namespaceஎன்பது வேறு ஒன்றுமல்ல . இவை Folder உடன் ஒப்பிடக் கூடியவை.
எப்படி எல்லா fileகளும் folderlல் சேமிக்கப் படுகினறதோ அதே போல் libraryclass கள் name spaceல் சேமிக்கப் படுகின்றது.
.இவை name conflictஐ தவிக்கப் பயன்படிகின்றது.
.
library classல் library methodகள் உளளன. இங்கு Consoleல் WriteLine method உள்ளது.

சி#ஐ பொருட்த வரை c++ போல் அல்லாமல் எந்த methodம் classக்குள் மடுமே இருக்க வேண்டும் .classக்கு வெளியே எந்த methodம் இருக்கக் கூடாது. global declarationம் சி#ல் தவிர்க்கப் பட்டுள்ளது.

எல்லா நிரல்களிலும்(programs) Main FUNCTION கட்டாயம் இருக்க வேண்டும். இங்கு தான் நிரல் ஆரம்பிக்கின்றது. இங்கு தான் நிரல் முடிகின்றது. மற்ற மொழிகளின் main function போல் அல்லாமல் Main('M' capital) என்று அறிவிக்கப் படுகின்றது.

சி#தன்மைகள்.

எளிமையானது:

C# மொழி அளிமையன மொழியாகும். பாயிண்டர்ஸ் (pointers) கருத்து நீக்கப் பட்டுள்ளது.boxing, unboxing மூலம் சாதரண தரவிலிருந்து (Data type) objectக்கும் objectன் இருந்து சாதாரண தரவுக்கும் மாறாலம்.

புதுமையானது:

Garbage collection என்கின்ற நினைவத்தை கையாளும் முறை சி#ல் செய்யப் படுகின்றது.ஒரு object உபயோக முடிவுக்கு வரும் பொது garbage collector மூலம் நினைவத்திலிருந்து அகற்றப் படுகின்றது.


பொருள் நோக்கு நிரலாக்கம் :
சி# பொருள் நோக்கு மொழியாகும்.Encapsulation,inheritance,polymorphism ஆகியவற்றை செயல் படுத்துகின்றது. multiple inheritance நீக்கப் பட்டு இடை முகம் (interface) என்ற கருத்து உட்புகுத்தப் பட்டுள்ளது .


தரவு பாதுகாப்பு:
1. மதிப்பிடாத மாறிகளை உபயோகிக்க முடியாது. ஒரு classன் உறுப்பினரான மாறிகள் (variables) கம்பைலரால் பூஜ்யத்துக்ககு தொடக்க மதிப்பு இருத்தப் படுகின்றது.local variableகளுக்கு நிரலாள்ர்களே பொறுப்பாகும்.

2. c,c++ போல் அல்லாமல் c# array உறுப்பினர்களின் எல்லைகளை சோதிக்கின்றது. அதாவது a[5] என்று அறிவிக்கப் பட்ட பின் a[0] நவில் இருந்து a[4] க்கு மேல் உபயோகிக்க முடியாது.

versionable:

ஒரு பயன்பாட்டின்(application) வெவ்வெறு பதிப்புகளை ஒரே கணினியில் நிறுவும் போது அவை ஒரே DLL file களை (DYNAMIC LINK LIBRARY) நிறுவுகின்றது. இதனால் சில பயன்பாடுகளினால் இயங்க்க முடியாமல் போகின்றது.இதைசி# மூலம் சரி செய்ய முடியும்.

பின் குறிப்பு:

சி# ல் பாயிண்டர்ஸ் தவிர்க்கப் பட்டாலும் unsafe என அறிவித்து விட்டு பாயிண்டர்ஸை பயன் ப்டுத்த முடியும். எனவே சி#ஐ flexible எனவும் கூறலாம்.
ads Udanz

c# chapter-1சிஷார்ப் -மொழி-ஒரு அறிமுகம்.



சிஷார்ப் -டாட் நெட்க்கென பிரெத்யேகமாக உருவாக்கப்பட்ட மொழியாகும்.

இது பொருள் நோக்கு நிரலாக்கமாகும்.(object oriente dlanguage)

c மற்றும் c++ ஆகியவற்றை அடிப்ப்டையாகக் கொண்டது.

vbயின் எளிமையும் , சி++  உடைய திறன்களையும்  ஜாவா வின் அழகையும் கொண்டது.


பயன்கள்:
டாஸ் அடிப்படையிலான பயன்பாடுகள்.
விண்டோஸ்  பயன்பாடுகள்.
விண்டோஸ் கண்ட்ரரோல்கள் உருவாக்குதல்.
ASP.NET திட்டங்கள்(ப்ரொஜெக்ட்)
web controls
இணைய சேவைகள்.


டாட்நெட் ஒரு அறிமுகம்.

                         இணையம் அறிமுகப் படுத்தப்பட்ட பின்  இணைய பயன்பாடுகள்(applications) உருவாக்குவதற்காக ஜாவா அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஜாவா பெரிய வெற்றி  பெற்ரது. மைக்ரோஃஸாப்ட் சார்பாக இணைய மொழி யேதும் இல்லை.
மைக்ரோஃஸாப்ட் அப்போது புகழ் பெற்றிருந்த தனது மொழியான vb6ல் இணைய கருத்துருக்களை உட்புகுத்தியது.
ஆனால் அது வெற்றி  பெறவில்லை.அதன் பின்னர் டாட்நெட்டை அறிமுகப்படுத்தியது.

                    ஜாவாவைப் பொருத்தவரை பொதுவாக இப்படிச் சொல்வர்கள்."write once in java and run any where".அதாவது ஜாவா ஒரு portable மொழியாகும்.ஒரு பிளாட்ஃபார்மில் எழுதிய நிரலை(program) எந்த பிளாட்ஃபார்மிலும் அப்ப்டியே இயக்கலாம். ஆனால் டாட்நெட்டிலோ எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆம் டாட்நெட் c#,c++,vb,cobol என நிறைய மொழிகளை ஆதரிக்கிறது.
                   டாட்நெட்டில் எந்த மொழியில் எழுதினாலும் அவை முதலில் complie செய்யப் ப்ட்டு il(intermediate language) ஆக மாற்றப் படுகிறது. இந்தIL(MSIL) ஜாவாவின் class ஃபைல்கள் போன்றதன்று. ஏனென்றல் class ஃபைல்கள் படிக்க முடியாதவை.ஆனால்MSIL தனி மொழியாகும். இதற்கென்றே தனியாக புத்தகங்ககள் உண்டு.



டாட்நெட் பின்வரும் மொழிகளை ஆதரிக்கின்றது.

c#
c++
visual basic
jscript.
மேலும் மூன்ராம் நபர் மொழிகளான
cobol
eiffel
perl
phython
small talk.
mercury
ஆகியவற்றையும் அதரிக்கின்றது.


டாட்நெட்டின் பயன்கள்

1. எளிதானது.
2. விரைவானது.
3. நிறைய  library class ஐ உள்ளடக்கியது.இவை எல்லா மொழிக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.
4. நிறுவது எளிது.
5. குறைந்த பட்ச பிழைகள் கொண்டது.

c#ம் டாட்நெட்டும்
சி ஷார்ப் -டாட் நெட்க்கென பிரெத்யேகமாக உருவாக்கப்பட்ட மொழியாகும். டாட்நெட்டில் பயன்பாடுகள் உருவாக்கும் போது நிரலாளர்கள் (project) பெரும் பாலும் தேர்ந்து எடுக்கும் மொழி c# ஆகும்.சமீபத்திய பதிப்பு (version )  c# 4.0 ஆகும்.



ads Udanz

c# chapter-2 .NET பயன்பாடுகள்


.
.NET கொண்டுவெவ்வேறு விதமான பயன்பாடுகளை உருவாக்கலாம். மேலும் ஒரு டாட் நெட் solution வெவ்வேறு  மொழியில் எழுதப்பட்ட திட்டங்களை கொண்டிருக்கலாம். இது டாட் நெட்டின் interoperability பண்பு மூலம் சாத்தியமாகிறது.
கன்சோல்  பயன்பாடுகள்.
Console பயன்பாடுகள் graphics இருக்காது. Characters மட்டுமே இருக்கும்.
Public static void Main(String args)
என்ற வாக்கியம் console பயன்பாடுகளின் நுழைவாயிலாக உள்ளது. Read,ReadLine,write,WriteLine ஆகிய system.console ல் உள்ள method களை
கன்சோல்  பயன்பாடுகள் உபயோகித்து கொள்கின்றன.
விண்டோஸ் பயன்பாடுகள்.
விண்டோஸ் பயன்பாடுகளுக்கு ஒரு உதாரணம் ms-word ஆகும்.
பொதுவாக கட்டளைகள் graphics மூலம் icon ஆக கொடுக்கப் பட்டிருக்கும்.
அவற்றை சொடுக்குவதன் மூலம் நாம் அவற்றை இயக்கலாம். டாட் நெட் கொண்டு இது போன்ற விண்டோஸ் பயன்பாடுகளை உருவாக்கலாம்.
Windows control
Tool box ல் உள்ள ஒரு கன்ரட்ரோல் அல்லது அதிக கன்ட்ரோல்களை கொண்டு புதிய  கன்ட்ரோல்களை உருவாக்கலாம். vb6 அல்லது vc++ கொண்டு  activex control  உருவாக்குவதை அறிந்தவர்கள் .நெட் கொண்டு உருவாக்குவது எளிது.
இணைய பயன்பாடுகள்.
இணைய தளங்க்களை asp.net கொண்டு உருவாக்கலாம்.வெப் சர்வரில் உள்ள asp.net engine,  asp.net வரிகளை இயக்கி html வரிகளாக மாற்றுகிறது.
இணைய உலாவி(browser) அவற்றை இயக்கி இணைய பக்கங்களாக மாற்றுகிறது. Asp.net கொண்டு நிகழ் நேர(dynamic) வெப் தளங்க்களை உருவாக்கலாம்.
இணைய சேவைகள்.
Web services எனபது மற்ற வெப் தளங்களுக்கு தகவள்களை பகிர்ந்து கொள்வது ஆகும். உதாரணமாக climate,stock market report  ஆகியவற்றை webservices மற்ற வெப் தளங்களுக்கு சேவையாக வழங்குகிறது.
பொதுவாக டாட் நெட்டின் நோக்கமே மென்பொருள்களை வழங்குவதே ஆகும். (software as services).
o

 

ads Udanz